கள்ளக்குறிச்சி: திடீர் சாலை மறியல்...

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2026-01-07 15:39 GMT
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். 10 வருடம் பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி வரைமுறைப்படுத்துதல், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்தல், ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Similar News