ஆரணியில் 86 ஆயிரத்து 52 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு. ஆரணி எம்.பி துவக்கி வைத்தார்.

ஆரணியில் 86ஆயிரத்து 52 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்களுடன் ரொக்கப்பரிசு ரூ.3000 வழங்கும் திட்டத்தினை ஆரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் துவக்கி வைத்தார்.;

Update: 2026-01-08 16:05 GMT
ஆரணியில் 86ஆயிரத்து 52 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்களுடன் ரொக்கப்பரிசு ரூ.3000 வழங்கும் திட்டத்தினை ஆரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் துவக்கி வைத்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்தி 710 குடும்பங்களுக்கும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு மற்றும் ரூபாய் 3000 உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிற நிகழ்ச்சியை சென்னையிலே தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக ஆரணி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆரணி அண்ணாசிலை அருகில் வைகை கூட்டுறவு பண்டகசாலையில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.,3ஆயிரம் ஆகியவற்றை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் வழங்கி துவக்கி வைத்தார். மேலும் ஆரணி அடுத்த விண்ணமங்கலம், சேவூர் ஆகிய கிராமங்களிலும் பொங்கல் தொகுப்பு பொருட்களை கொடுத்து துவக்கி வைத்தார். ஆரணி வட்டத்தில் மொத்தம் 86 ஆயிரத்து 52 குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து பொங்கல் வரை தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என்று எம்.பி தெரிவித்தார். உடன் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், மாவட்ட மகளிர் அணி லலிதா சண்முகசுந்தரம் ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்டதுணை செயலாளர் ஜெயராணிரவி, நகரபொறுப்பாளர் சைதை வ.மணிமாறன், ஒன்றியசெயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தர், துரைமாமது, மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News