ராமநாதபுரம் 32 மீனவர்கள் சிறை பிடிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரையும் ஐந்து விசைபடகையும் சிறை பிடித்த இலங்கை கடற்படை, கவலையில் மீனவர்கள் குடும்பங்கள்;

Update: 2025-02-23 07:53 GMT
ராமநாதபுரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் மன்னார் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து ஐந்து விசைப்படகையும் அதிலிருந்து 32 மீனவர்களை கைது செய்து விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர் இந்த பிப்ரவரி மாதம் மட்டும் 11 விசைப்படகுகள் 66 மீனவர்கள் கைது செய்தது உள்ளது இலங்கை அரசு இது கட்ச தீவு திருவிழா நடக்கும் அந்த மாதத்தில் மட்டும் அதிகமான மீனவர்களையும் விசைப்படைகளையும் கைது நடவடிக்கை ஈடுபட்டு வருகிறது போன வருடம் இதேபோன்று கைதி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை அரசை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்து இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் பாலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் எனவே இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News