கோபியில் வாகன சோதனை 3,216 மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது
கோபியில் வாகன சோதனை 3,216 மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது;
கோபியில் வாகன சோதனை 3,216 மதுபாட்டில்கள் பறிமுதல் 3 பேர் கைது கோபியில் சத்தி, கோபி, திருப்பூர் ரோடுகள் இணையும் இடத்தில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு எஸ்.ஐ. சபரிநாதன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு சரக்கு ஆட்டோவில் அளவுக்கு அதிகமான அரசு மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக, ஆட்டோவை நிறுத்தி திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில் அனைத்து மதுபாட்டில்களும் கோபியில் உள்ள டாஸ்மாக் கடையில் வாங்கியதும், பொங்கல், மாட்டுப் பொங்கல் போன்ற தொடர் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வாங்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. உடனடியாக, ஆட்டோவில் இருந்த திருப்பூரைச் சேர்ந்த செல்வராஜ் (27), மணிகண்டன்(30) மற்றும் சிவகங்கை மாவட்டம், அழகர் கோயிலைச் சேர்ந்த காளீஸ்வரன் (36) ஆகிய 3 பேரையும் கோபி போலீ சார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சரக்கு ஆட்டோவும், அதில் இருந்த 3 ஆயிரத்து 216மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.