ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் இராசிபுரம், நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய வட்டங்களில் 326 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய வட்டங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாவட்ட ஆட்சியர் தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் 326 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.;
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கு பல்வேறு முகாம்கள் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களின் நலனை காக்கும் வகையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் உயர் மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் பொதுமக்களுக்கு ரூ.5000 முதல் ரூ.10,000 வரை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள கூடிய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டது. கொரோனா தொற்று காலத்தில், மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாத என்பதற்காக அவர்களின் இல்லத்திற்கே வந்து கல்வியை வழங்கும் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது.இராசிபுரம் அரசு மருத்துவமனை ரூ.53.39 கோடி மதிப்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இராசிபுரத்தில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் 600 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. போதமலை கீழுர்-மேலூர் மற்றும் கெடமலையில் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடி மதிப்பில் சாலை 2 சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இராசிபுரம் நகராட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தின் கீழ் விடுபட்ட மகளிருக்கு வருகின்ற 12.12.2025 முதல் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலைமைச்சர் மகளிரின் சுமைகளை குறைக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தெரிவித்தார்.இன்றைய தினம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , இராசிபுரம் வட்டம், குமரவேல் திருமண மண்டபத்தில் 119 பயனாளிகளுக்கும், நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 152 பயனாளிகளுக்கும், 832 மாணவியர்களுக்கும், சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 55 பயனாளிகளுக்கும் என மொத்தம் 326 பயனாளிகளுக்குபுதியமின்னணுகுடும்பஅட்டைகளைவழங்கினார்.இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர்கள் கவிதா சங்கர் (இராசிபுரம்), துணை மேயர் செ.பூபதி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.