பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி காங்கிரஸ் பேரணி!

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.

Update: 2024-09-09 09:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மத நல்லிணக்க ஒற்றுமைக்காகவும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மகிளா காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் ஹசீனா சையத் பேரணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் பழைய மாநகராட்சி முன் பேரணி நடைபெற்றது. மகிளா காங்கிரஸ் மாநகர் துணைத் தலைவர் ப்ரீத்தி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஹசீனா சையத் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேரணியைத் தொடக்கிவைத்துப் பங்கேற்றார். இப்பேரணி பழைய மாநகராட்சி, ரயில் நிலையச் சாலை வழியாக இந்திரா காந்தி சிலையை அடைந்தது. அதையடுத்து, இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. பேரணியில், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தனலட்சுமி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன், முன்னாள் எம்எல்ஏ டேனியல்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன், கிழக்கு மண்டலத் தலைவர் மிக்கேல், கட்சியினர் பங்கேற்றனர்.

Similar News