ராணிப்பேட்டையில் 35 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது
35 கிலோ கஞ்சா கடத்திய குற்றவாளிகள் கைது;
ராணிப்பேட்டையில் வெளிமாநிலத்தில் இருந்து சுமார் 35 கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்தி வந்த 3 குற்றவாளிகள் கைது. ராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வட்ட ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையில் குற்றவாளிகளை கைது செய்தனர்.