சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் 35 நெசவாளர்களுக்கு 14 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ....*

சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் 35 நெசவாளர்களுக்கு 14 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ....*;

Update: 2025-08-09 09:51 GMT
விருதுநகரில்11வது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் 35 நெசவாளர்களுக்கு 14 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் .... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 11 வது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மற்றும் விருதுநகர் மாவட்டம் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு கைத்தறி கண்காட்சியில் கைத்தறி மாதிரி தறி காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்கலான மதுரை சுங்கடி, காரைக்குடி கண்டாங்கி, சேலம் வெண்பட்டு வேஷ்டி,கோவை கோராப்பட்டு, ஆரணி பட்டு, திருப்புவனம் பட்டு சேலைகள், செயற்கை பட்டு சேலைகள், கோர்வை ரக சேலைகள், கோரப்பட்டு சேலைகள் மற்றும் பவானி ஜமுக்காளம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 35 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ. 14 லட்சம் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வழங்கினார். இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கைத்தறித்துறை உதவி இயக்குனர் வெங்கடேசலு, அலுவலக ஊழியர்கள் செய்துள்ளனர்.

Similar News