கோவை: புறநகர் பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை – 37 பேர் கைது, 936 பாட்டில்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் பொது விடுமுறை நாளில் மது விற்பனை தடுப்பு நடவடிக்கையில் 37 பேர் கைது, 77 லிட்டர் கள் பறிமுதல்.;

Update: 2025-10-03 03:53 GMT
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விற்பனைக்கு பொது விடுமுறை நாளில், கோவை மாவட்ட காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 37 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 936 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 77 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய புறநகர் பகுதிகளில் நடைபெற்றது. மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கூட இதில் ஈடுபட்டு 7 நபர்களை கைது செய்து 84 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர்.

Similar News