நாமக்கல் மாவட்டம் முழுவதும் வலம் வரும் அறிவியல் ரதம்!

நாமக்கல் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Update: 2024-07-17 09:44 GMT
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அறிவியல் ரதம் தொடக்க விழா நடைபெற்றது. பயிற்சி நிறுவன முதல்வர் மு.செல்வம் தலைமை வகித்தார். துணை முதல்வர் க.அமீருன்னிசா வரவேற்றார். தொடர்ந்து அறிவியல் ரதத்தை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரதம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 40 நடுநிலைப்பள்ளிகளுக்கு செல்ல உள்ளது. மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் இந்த ரதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் இரு பள்ளிகளுக்கு இந்த ரதம் செல்ல உள்ளது. ரதத்தில் சென்னை ஐஐடியை சேர்ந்த இருவர் செல்கின்றனர். அவர்கள் எளிய முறையில் அறிவியல் பரிசோதனைகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்து அவற்றின் அன்றாட வாழ்கை பயன்பாடுகள் குறித்து விளக்கிக் கூற உள்ளனர் என பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தெரிவித்தார். தொடர்ந்து அறிவியல் ரதம் பள்ளிகளுக்கு செல்வதற்கு ரோட்டரி மாவட்டக் கல்விக்குழு (2982) அமைப்பினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் வெங்கடேஸ்வர குப்தா, சிவக்குமார், கருணாகர பன்னீர்செல்வம், ஹரி நிவாஸ், செந்தில்குமார், நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி "அபி" பன்னீர்செல்வம் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன ஊழியர்கள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர் தேவராசு நன்றி கூறினார்.

Similar News