வெங்கமேடு ஐயப்பன் கோவில் 39-ம் ஆண்டு மண்டல பூஜை முன்னிட்டு அன்னதானம்.

வெங்கமேடு ஐயப்பன் கோவில் 39-ம் ஆண்டு மண்டல பூஜை முன்னிட்டு அன்னதானம்.

Update: 2024-12-15 12:56 GMT
வெங்கமேடு ஐயப்பன் கோவில் 39-ம் ஆண்டு மண்டல பூஜை முன்னிட்டு அன்னதானம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு ஸ்ரீ ஐயப்பன் கோவில் பஜனைமடத்தில் 39 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழாவும், 12 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐயப்பன் கோவில் நிர்வாக கமிட்டி பொறுப்பாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ஐயப்பன் கோவில் நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பிறகு அன்னதானத்தை உட்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News