திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி களில் 14 : 15 : நிதிக்குழு மானிய கணக்கில்
பல லட்சம் திருட்டு - தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியான உண்மை;
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க தலைவர் என்.பி.பாஸ்கரன், தமிழ்நாடு முதலமைச்சர், தலைமை செயலகம் சென்னை, இயக்குனர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் பனகல் கட்டிடம் சைதாப்பேட்டை, சென்னை, மாவட்ட ஆட்சியர் நாகப்பட்டினம், திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், நாகப்பட்டினம் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி களில், 14 : 15 : நிதிக்குழ மானிய கணக்கில், பல லட்சம் பணம் எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டதற்கு பணம் எடுக்கப்பட்டு உள்ளது என்று பதில் கூறி உள்ளார்கள். யார் வீட்டு பணத்தை யார் எடுப்பது? மக்கள் பணம் அதை எப்படி எடுக்க முடியும்? எடுத்தவர்கள் மீது இன்று வரை காவல் துறையில் புகார் அளிக்கப்பட வில்லை. ஏன் பசிக்கு பத்து ருபாய் திருடினால் அவன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், மக்கள் பணத்தை பல லட்சம் ரூபாய் எடுத்து உள்ளார்கள். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளார்கள். இது நியாயமா கூறுங்கள். அரசு அதிகாரிகள் சம்பள பணத்தை இதேபோல் வேற நபர்கள் எடுத்து விட்டால், இதேபோல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பீர்களா? உங்கள் பணம் என்றால் ஒரு நியாயம். அதே மக்கள் பணம் என்றால் ஒரு நியாயமா? மக்கள் பணத்தை எடுத்த ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், அதற்கு ஆதரவாக உள்ள அதிகாரிகள் மீது இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. ஏன் காவல் துறையில் புகார் அளிக்கவில்லை. உடனடியாக, திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி களில் 14 : 15 : நிதிக்குழு மானிய கணக்கில் பல லட்சம் ரூபாய் கையாடல் செய்து உள்ளார்கள். அவர்கள் மீது புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமருகல் ஒன்றியத்தில், இடையாந்தங்குடி ஊராட்சியில் ரூ.2.40 லட்சம், நரிமணம் ரூ.6 லட்சம், திருக்கண்ணபுரம் ரூ.3 லட்சம், கொத்தமங்கலம் ரூ.9 லட்சம். இதேபோல், 39 ஊராட்சிகளில் 14 : 15 : நிதிக்குழு மானிய கணக்கில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளார்கள். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.