லாரியில் கடத்திய 394 கிலோ குட்கா பறிமுதல்

புதிய தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் கடத்திய 394 கிலோ குட்கா பறிமுதல் ஓட்டுநர் கைது;

Update: 2025-04-18 06:08 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல் கூடப்பட்டி புதிய தேசிய நெடுஞ்சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா கடத்தப்படுவதாக பாலக்கோடு டிஎஸ்பி மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் காவலர்கள் ஏப்ரல் 18 இன்று விடியற் காலையில் பாலக்கோடு காவல் ஆய்வாளர் பாலசுந்தரம் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோர்ந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் நோக்கி வேகமாக வந்த மினி சரக்கு லாரியை அருகே நிறுத்த முயற்சி செய்தபோது வாகனம் வேகமாக சென்றது. பின்னர் துரத்தி சென்று வாகனத்தை மடக்கி சோதனை செய்த போது அதில் 3 லட்சம் மதிப்பிலான 394 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மினி சரக்குள் அறையில் ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்ததில் சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியை சேர்ந்த பாபர் என்பது தெரியவந்தது மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை  பறிமுதல்  செய்தனர்.

Similar News