கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில், மேலும் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், சாராயம் விற்றவர்கள், மெத்தனால் சப்ளையர்கள் என மொத்தம் 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இவர்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சூ.பாலப்பட்டு நடராஜன் மகன் கதிரவன்,31; சேஷாசமூத்திரம் பெரியசாமி மகன் சின்னதுரை,.36; புதுச்சேரி மடுாகரை ஷாகுல்ஹமீது,61; சென்னை மாதவரம் பெப்பாரம் மகன் பன்ஷிலால்,32; ஆகிய 4 பேரை, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., வினோத்சாந்தாராம் பரிந்துரையை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று வழங்கினர். இவ்வழக்கில் கடந்த வாரம் ஏற்கனவே 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.