குமரி மாவட்டம் நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்தார். இரவு 11:30 மணி அளவில் டெரிக் சந்திப்பில் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது எதிரே 2 பைக்கில் வந்த 4 பேர் திடீரென எஸ்பி வாகனத்தை வழிமறித்து கற்களை எடுத்து ஏ எஸ் பி வாகனத்தின் மீது வீசினார். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்தது. போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது அவர்களையும் கற்களை காட்டி கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு தப்பினர். நேசமணி நகர் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வாகனத்தில் கல் வீசியது தக்கலை அருகே உள்ள மணலிகரையை சேர்ந்த சகோதரர்கள் கார்வின் ஜோஸ், சலின் ஜோஸ், குருந்தன்கோடு ஜெனிஸ், வெள்ளிச்சந்தை அப்பு என்ற 4 பேர் என்ன தெரிய வந்தது. போலீசார் நான்கு பேரையும் நேற்று இரவு கைது செய்து, இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.