ஆற்காட்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சட்டத்தில் 4 பேர் கைது!

4 தடுப்பு சட்டத்தில் கைது செய்த மாவட்ட எஸ்பி!

Update: 2025-01-09 05:08 GMT
ஆற்காடு டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட ஆற்காடு மாசாபேட்டை மற்றும் வேப்பூர் பகுதிகளை சேர்ந்த பாலாஜி (வயது 29), ரகு (25), பரத் (26), ஸ்ரீதர் (25) ஆகியோரை ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் கைதுசெய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இவர்களின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா ஆட்சியருக்கு பரிந்துரை செயதார். அதன்பேரில் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.

Similar News