ஜோலார்பேட்டை ரயில் டிக்கெட் கவுண்டர் அருகே இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட நான்கு பேர் கைது 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்..

ஜோலார்பேட்டை ரயில் டிக்கெட் கவுண்டர் அருகே இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட நான்கு பேர் கைது 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்..;

Update: 2025-01-29 13:51 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் டிக்கெட் கவுண்டர் அருகே இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட நான்கு பேர் கைது 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் வந்தது அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது டிக்கெட் கவுண்டர் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர் பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த சிவா (53) மற்றும் ராம ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் (24) கார்த்திக் (வயது 19) மற்றும் 16 வயது வயதுடைய நான்கு பேரும் சேர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் ஜோலார்பேட்டை டிக்கெட் கவுண்டர் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்னைக்கு வேலைக்கு சென்று வந்ததும் இதை தினந்தோறும் கண்காணித்து அவருடைய ஒரு இருசக்கர வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்களிடமிருந்து நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர் சிவா மற்றும் கிஷோர், கார்த்திக் ஆகிய மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றும் 16 வயது சிறுவன் என்பதால் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்…

Similar News