கால்வாயில் பாய்ந்த கார் 4 பேர் உயிர் தப்பினர்

தக்கலை;

Update: 2025-03-01 10:18 GMT
குமரி மாவட்டம் மனவளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை தக்கலை அருகே அரசு விளை பகுதியில் உள்ள உறவினர் மகள் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.         குறுகிய சாலையில் வழியாக கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டு இழந்து சாலையோரம் உள்ள பாசன கால்வாயில் கார் கவிழ்ந்தது.  இதில் காரின் உள்ளே மாட்டிக் கொண்டு தவித்த வழக்கறிஞர், இரண்டு பெண்கள், மற்றும் 4 வயது சிறுவன் உட்பட பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.       மேலும் காரில் மாட்டிக் கொண்டு தவித்த நபர்களை அப்பகுதி  மக்கள் பத்திரமாக மீட்டனர்.  கவிழ்ந்த காரையும்  மக்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

Similar News