அரக்கோணத்தில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல்;

Update: 2025-03-03 05:46 GMT
அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயண சாமி, பாலாஜி தலைமையிலான போலீசார் 2 குழுக்களாக பிரிந்து நேற்று முன்தினம் இரவு பழனிபேட்டை, பஜார் பகுதி, சுவால்பேட்டை,புதிய பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த பையை போலீசார் சோதனை செய்த தில் சுமார் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனைய டுத்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து கஞ்சா பையை விட்டு சென்ற மர்ம நபர் யார்? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Similar News