தென்காசி அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை -கல்லூரி மாணவர் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை -கல்லூரி மாணவர் கைது;
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏந்தலூர் கிராமத்தில் நடுத்தெருவில் வசிக்கும் சந்திரன் மகன் செல்வம் இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதில் இரண்டு நாள்களுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு படிக்கும் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த உறவினர்கள் புகாரின் பேரில் போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து கல்லூரி மாணவனை சிறையில் அடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.