திருப்பூரில் போதை மாத்திரைகளுடன் 4 பேர் கைது

திருப்பூரில் போதை மாத்திரைகளுடன் 4 பேர் கைது 600 கிராம் கஞ்சா மற்றும் 50 மாத்திரைகள் பறிமுதல்;

Update: 2025-03-15 01:13 GMT
திருப்பூரில் போதை மாத்திரைகளுடன் 4 பேர் கைது
  • whatsapp icon
திருப்பூர் பெரியார்காலனியை அடுத்த முத்துகோபால் நகர் பகுதியில் ஒரு கட்டிடத்தின் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் வாலிபர்கள் இருப்பதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த 4 வாலிபர்களை பிடித்து வீசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் ராம்பிரசாத் (வயது 24), கவின்குமார் (27), மோகன் (21), நவீன்குமார் (21) என்பது தெரிய வந்தது. மேலும் அந்த 4 பேரும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 50 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News