திருவெறும்பூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற இரண்டு பெண்கள் உள்பட 4 போ் கைது
விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீசார்;

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் கக்கன் காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனையிட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி வித்யா (36), தங்கராஜ் மகன் மனோஜ் குமாா் (25), சுருளி கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் (38), காட்டூரைச் சோ்ந்த ஆரோக்கிய மேரி (53) ஆகிய 4 போ் ஆங்காங்கே தனித்தனியே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.