தனியார் நிறுவனங்களில் ஒயர் திருடிய பெண் உள்பட 4 பேர் கைது
தனியார் நிறுவனங்களில் ஒயர் திருடிய பெண் உள்பட 4 பேர் கைது;
தனியார் நிறுவனங்களில் ஒயர் திருடிய பெண் உள்பட 4 பேர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் பிஸ்கட் கம்பெனி மற்றும் சோலார் நிறுவனத்தில் கடந்த 2-ந் தேதி ஓயர்கள் திருட்டுப்போனது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சார்பில் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒயர் திருடிய மர்மநபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று புஞ்சைபுளியம்பட்டி போலீசார் புங்கம்பள்ளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெண் உள்பட 4 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் குரும்ப பாளையத்தை சேர்ந்தராணி (வயது 35). ரவி (41). அய்யாசாமி (38), மயில்சாமி (41) ஆகியோர் என்பதும். இவர்கள் 4 பேரும் சேர்ந்துதான் தனியார் நிறுவனங்களின் ஒயர்களை திருடி னார்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.