நாகர்கோவில் : அண்ணனுக்கு 4 ஆண்டு சிறை

தங்கை நிலம் அபகரிப்பு;

Update: 2025-04-05 03:56 GMT
மதுரை, திருநகர் பிருந்தாவன் தெருவை சேர்ந்தவர் நீலா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நாகர்கோவில் எஸ் பி அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார், அதில் தன்னுடைய தந்தை காசிநாத பிள்ளை சுசிந்திரம், குலசேகரபுத்தில் உள்ள ஒரு மடத்துக்கு சொந்தமான நிலத்தை வாங்கி அதில் 90 சென்று நிலத்தை எனக்கு எழுதிக் கொடுத்தார்.  அது தென்னந்தோப்பு ஆகும்.  அந்த நிலத்தை சுசீந்திரம் சன்னதி தெருவில் வசிக்கும் எனது சகோதரர் ஜெகதீஷ் என்பவர் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்று வருகிறார் எனவே  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.      அந்த புகார் பேரில்  நில அபகரிப்பு சிறப்பு பிரிவு போலீசார் விசாரணையை மேற்கொண்டு புகார் அளித்த பெண்ணின் சகோதரர் ஜெகதீசனை கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைத்தனர் அதன்பிறகு இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ,இந்த வழக்கில் நாகர்கோவில் நீதிமன்றம் தந்தை நிலத்தை போலி ஆவணம் தயாரித்து தங்கையிடம் இருந்து  அபகரிக்க முயன்றது உண்மை என்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஜெகதீசுக்கு நான்கு ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூபாய் 12,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து.

Similar News