தேனி, பாலார்பட்டி பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்துவதாக நேற்று (ஏப்.20) வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சேவல் சண்டையை நிறுத்தி, அனுமதியின்றி போட்டி நடத்திய சுரேஷ், தாழவிக்னேஷ், ஜெயபிரபு, பிச்சைமணி, ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த சேவல்கள், பணம் ரூ.6,680-ஐ பறிமுதல் செய்தனர்.