ஜெயங்கொண்டம் அருகே தூக்க கலக்கத்தில் தடுப்பு சுழற்சியில் ஏரி மின்கம்பத்தில் மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 4 பேர் காயம்

ஜெயங்கொண்டம் அருகே தூக்க கலக்கத்தில் தடுப்பு சுழற்சியில் ஏரி மின்கம்பத்தில் மோதிய விபத்தில் டிரைவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.;

Update: 2025-04-22 07:48 GMT
அரியலூர், ஏப்.22- ஜெயங்கொண்டம் அருகே தூக்க கலக்கத்தில் சாலை தடுப்பு சுவற்றில் ஏறி மின்கம்பத்தில் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சத்திரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தணிகாசலம் இவர் தனது மகன்களான நடராஜன், அர்ச்சுனன், தனஞ்செயன் உள்ளிட்ட நான்கு பேருடன் மினி லாரியை மூத்த மகன் அர்ச்சுனன் ஓட்ட அரியலூர் மாவட்டம் தா.பழூருக்கு விறகு வெட்டும் வேலைக்காக சென்றனர் புதுச்சாவடி அருகே கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மினிலாரியை ஒட்டிய டிரைவர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையின் தடுப்புச் சுவரில் ஏறி மின்கம்பத்தில் மோதியது. இதில் டிரைவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் பலத்த காயம் அடைந்தனர் காயமடைந்த நான்கு பேரும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News