உடைந்த பீர்பாட்டிலை காட்டி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது
திண்டுக்கல்லில் வாலிபரிடம் கத்தி மற்றும் உடைந்த பீர்பாட்டிலை காட்டி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது;
திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக் என்பவர் முத்தழகுப்பட்டி ஒத்தைபனைமரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சந்தோஷ்குமார்(21), அருண்செபஸ்தியார்(20), டோம்னிக்ஆல்பர்ட்(22), ஜாக்கோகுல்(19) ஆகிய 4 பேர் கத்தி மற்றும் உடைந்த பீர்பாட்டிலைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறித்ததாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.