பேராவூரணியில்,  புதிய வாரச்சந்தை, தார்ச்சாலை என ரூ.4 கோடியில் வளர்ச்சிப் பணிகள்  எம்.பி, எம்எல்ஏ துவக்கி வைத்தனர் 

வளர்ச்சி பணிகள்;

Update: 2025-08-03 07:54 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, புதிய பேருந்து நிலையம் அருகில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய வாரச்சந்தை ரூபாய் 2 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.  மேலும், பேராவூரணி ஒன்றியம், காலகம் ஊராட்சி, ஊத்தப்பள்ளம்-பட்டுக்கோட்டை இணைப்பு சாலை, முதலமைச்சர் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.81 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. இதேபோல, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழனிவாசல் ஊராட்சி, ஆற்றங்கரை சாலை ரூ.31 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, சனிக்கிழமையன்று மாலை, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.  நிகழ்வில், திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.பழனிவேல், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், மு.கி.முத்துமாணிக்கம், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோ, நகரச் செயலாளர்கள் என்.எஸ்.சேகர், மாரிமுத்து, பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், நாகேந்திரன், பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் இரா.இராஜா, ஒன்றியப் பொறியாளர்கள், பேரூராட்சி பொறியாளர், பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News