செயின் பறிப்பு வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கைது

திண்டுக்கல் RM காலனி செயின் பறிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி கைது;

Update: 2025-08-18 13:36 GMT
திண்டுக்கல், நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு 7. 1/2 பவுன் செயின் பறித்த வழக்கில் சிவகங்கை, இளையான்குடி, உத்தமனூரை சேர்ந்த சின்னகண்ணு மகன் பூவலிங்கம்(36) என்பவரை நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் திண்டுக்கல் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது தொடர்பாக மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர்மைதீன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சிவகங்கையில் பதுங்கி இருந்த பூவலிங்கத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நீதிமன்ற நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றினர்.

Similar News