கபிலர்மலை அருகே மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலி.

கபிலர்மலை அருகே மின்சாரம் தாக்கி 4-ம் வகுப்பு மாணவன் பலியானது குறித்து போலீசார் விசாரணை.;

Update: 2025-08-18 14:09 GMT
பரமத்திவேலூர்,ஆக.18:   பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள தெற்கு செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 44), கார் டிரைவர். இவரது மகன் சஞ்சய் (9). இவன் வடக்கு செல்லப்பம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். தொடர் விடு முறையை யொட்டி ஞாயிற்றுக்கிழமை  சிறுவன் வீட்டில் இருந்தான். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை செல்லப்பம்பாளையத்தில் குண்டுமணி அம்மன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மேலே குருவிக்கூடு இருப்பதை அவன் பார்த்தான். பின்னர் அந்த குருவிக்கூட்டை எடுக்க டிரான்ஸ்பார்மரில் அவன் ஏரினான் அப்போது மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் சஞ்சய் சிக்கி தலைகீழாக தொங்கி கொண்டிருந்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மின் வாரிய துணுயினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் அவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சஞ்சய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பரமத்தி போலீசார் சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News