சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த 4பேரை

போலீஸார் கைது செய்தனர்

Update: 2024-07-29 13:34 GMT
சேலம் செவ்வாய்ப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி பிரபாத் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த தாதகாப்பட்டி வழிவாய்க்கால் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் தர்மராஜ் (27) என்பவரை செய்து கைது செய்தனர். அவரிடம் 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல் கொண்டலாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகுமார் சிவதாபுரம் பெருமாள் கோவில் கரடு பகுதியில் ரோந்து சென்றார். அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார்(45)என்பவரைகைது செய்து அவரிடம் இருந்து 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சூரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா அய்யம்பெருமாம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கஞ்சா விற்ற ஓமலூர் வெள்ளகல்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 175 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சேலம் இரும்பாலை இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் சிவதாபுரம் கணவாய்காடு காளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த சேலம் பெருமாம்பட்டி கொத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News