பட்டாசு தொழிலாளியின் வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆறுதல் கூறி 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் ...
பட்டாசு தொழிலாளியின் வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆறுதல் கூறி 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் ...;
திருத்தங்கல் பகுதியில் தீ விபத்தால் சேதம் அடைந்த பட்டாசு தொழிலாளியின் வீட்டை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆறுதல் கூறி 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் ... விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர் செல்வராணி ( 51 ). இவர் பட்டாசு காகித குழாய் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் கடந்த 5 தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் பணிக்கு சென்று விட்ட நிலையில் மாலையில் இவரது வீட்டில் பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்டு வீடு சேதம் அடைந்தது.இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி திருத்தங்களில் தீ விபத்தால் சேதம் அடைந்த வீட்டை பார்வையிட்டார். பின்பு வீட்டை இழந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய ராஜேந்திரபாலாஜி 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.