கரூர் 40,825 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 26.66 கோடி நிதியுதவி -ஆட்சியர் தங்கவேல் தகவல்.
கரூர் 40,825 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 26.66 கோடி நிதியுதவி -ஆட்சியர் தங்கவேல் தகவல்.;
கரூர் 40,825 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 26.66 கோடி நிதியுதவி -ஆட்சியர் தங்கவேல் தகவல். தமிழ்நாடு அரசு கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்திட தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பிரசவத்தின் போது பெண்களின் இறப்பு விகிதம் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவற்றை குறைக்கவும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகிறது. ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவது மற்றும் ஊதிய இழப்பை ஈடு செய்ய ரூ.18,000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் 40,825 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 26.66 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.