காரில் 4.5 கிலோ கஞ்சா நான்கு பேர் கைது

கைது;

Update: 2025-05-24 12:43 GMT
ஆண்டிபட்டி காவல் நிலைய போலீசார் நேற்று (மே.23) வத்தலகுண்டு சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் 4.5 கிலோ கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்தது. கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன், நதியா, விஜயலட்சுமி, ரவி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

Similar News