உடையார்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டம்
உடையார்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.;
அரியலூர், மார்ச்23- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது* சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், முத்துப்பட்டி அஞ்சல், கீழக்குளத்தில் வசிக்கும், சோனைமுத்து என்பவரின் மகன் சண்முகநாதன்(வயது 27/2025). சண்முகநாதன் கடந்த 14.02.2025-ம் தேதி தனது 4 கூட்டாளிகளுடன் சேர்ந்து அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கச்சிபெருமாள் கிராமத்தில் வசந்தா என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 48 பவுன் நகைகள், 01 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 1,00,000 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.இது தொடர்பாக உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.18.02.2025 அன்று ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சீராளன் அவர்கள் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் எதிரிகள் 5 பேரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். எதிரி சண்முகநாதன் மீது 20க்கு மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் எதிரி மேலும் வெளியே வந்தால் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க உடையார்பாளையம் வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.மு.கவிதா அவர்கள் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் இ.கா.ப., அவர்கள் பரிந்துரை செய்ததின் அடிப்படையில், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பொ.இரத்தினசமி, இ.ஆ.ப., அவர்கள் எதிரி சண்முகநாதனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.அதன் அடிப்படையில் இன்று 22.03.2025-ந் தேதி மேற்படி எதிரி ஒரு “குண்டர்” என குண்டர் தடுப்பு சட்டத்தின் படி சிறையில் அடைக்க அதற்கான ஆணை பிரதியை அரியலூர் மாவட்ட காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் வழங்கினார்கள்.