உயர்மின் கோபுர மின்விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த எம்.பி வி.எஸ் மாதேஸ்வரன்.

நாமக்கல் சட்டமன்றம் மோகனூர் ஒன்றியம், நெய்க்காரன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பெற்ற உயர்மின் கோபுர மின்விளக்கினை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு VS.மாதேஸ்வரன் MP கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.;

Update: 2025-11-08 12:51 GMT
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் பச்சைத்துண்டு பழனிமலை, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்டம் நாமக்கல் சட்டமன்ற மகளிரணி செயலாளர் பிரேமலதா, மோகனூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, சுரேஷ், சண்முகம், ஒருங்கிணைந்த மோகனூர் மகளிரணி செயலாளர் சுதா, தமிழ்செல்வி, வனிதா உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News