கரூரில் ரூபாய் 4.85 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.
கரூரில் ரூபாய் 4.85 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.;
கரூரில் ரூபாய் 4.85 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி. கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காதப்பாறை ஊராட்சி, நெரூர் தெற்கு ஊராட்சி,மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி,நெரூர் வடக்கு ஊராட்சி,சோமூர் ஊராட்சி பகுதிகளில் தார் சாலை மேம்பாட்டு பணி,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து பைப் லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி,சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,வடிகால் வசதிகள் அமைக்கும் பணி,ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல்,சாலைகளை பலப்படுத்தும் பணி,புதிய கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி என பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா அந்தந்த பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி அதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரவணன் வட்டாட்சியர் மோகன்ராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்தனர்.