சாலைப்புதூரில் ரூ. 49 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது.
சாலைப்புதூரில் ரூ. 49 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது.;
சாலைப்புதூரில் ரூ. 49 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் ஏலம் நடைபெற்றது. நொய்யல் அருகே சாலைப்புதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று 2,321 கிலோ எடை உள்ள 7,383 தேங்காய்கள் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். தேங்காய்கள் 1,20,681 க்கு விற்பனையானது. இதே போல 10,570 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய் ரூ.18,22,948க்கு விற்பனையானது. இதே போல கருப்பு, சிகப்பு, வெள்ளை ரக 25,632 கிலோ எள் ரூ.29,96,955க்கு விற்பனையானது.