வேலூர் மாநகராட்சியில் 49.77 கோடி வரி வசூல்!
வேலூர் மாநகராட்சியில் இந்த ஆண்டு சொத்து வரி இலக்காக 48.18 கோடி நிர்ணயிக்கப்பட்டது.;

வேலூர் மாநகராட்சியில் இந்த ஆண்டு சொத்து வரி இலக்காக 48.18 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வரை மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சேர்த்து ரூபாய் 49.77 கோடி சொத்து வரி வசூலித்து இலக்கை எட்டியுள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசின் 15வது நிதிக்குழு மானியம் பெற தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.