கேரள மாநிலம் வயநாடு பாதிக்கப்பட்ட பகுதிக்கு 5 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் அனுப்பிவைத்த ஆட்சியர்
கேரள மாநிலம் வயநாடு பாதிக்கப்பட்ட பகுதிக்கு 5 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் அனுப்பிவைத்த ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்கள் எடுத்து செல்லும் வாகனத்திற்கு ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார் வயநாடு பகுதியில் வரலாறு காணாத நில சரிவு மழை வள்ளத்தால் உயிரிழந்து வீடு உடைமைகளை இழந்து தவிக்கும் வயநாடு மக்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் கல்லூரி,மற்றும்,மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட உணவு பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு அரிசி,துணி மருந்து ,உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அடங்கிய சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மினி 3 லாரி மூலம் கேரளா மாநிலம் வய நாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடியசைத்து உணவு பொருட்கள் அடங்கிய வாகனத்தை அனுப்பிவைத்தார்