ரூ 5 லட்சத்தில் கட்டிய பாலத்திற்கு இணைப்பு சாலை முறையாக அமைக்காததால் கிராம மக்கள் எதிர்ப்பு.
ரூ 5 லட்சத்தில் கட்டிய பாலத்திற்கு இணைப்பு சாலை முறையாக அமைக்காததால் கிராம மக்கள் எதிர்ப்பு.
ரூ 5 லட்சத்தில் கட்டிய பாலத்திற்கு இணைப்பு சாலை முறையாக அமைக்காததால் கிராம மக்கள் எதிர்ப்பு. கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, தேவர் மலை ஊராட்சியில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில், தமிழ்நாடு அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2020-21-ல் அய்யம்பாளையம் பகுதியில் குழந்தை என்பவரது வீட்டின் அருகே மழை நீர் வடிகால் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வன் என்பவர் ஒப்பந்தம் மேற்கொண்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி பணிகளை துவக்கி, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ம் தேதி பணிகளை முடித்துள்ளார். இந்த பாலத்திற்கு ரூபாய் 4.90 லட்சம் அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலம் கட்டிய பிறகு பாலத்தின் இரு பகுதிகளிலும் இணைப்புச் சாலை அமைக்கும் போது, முறையாக தேவையான அளவு மண்கொட்டி அமைக்காமல் விட்டதால், அப்பகுதியில் அண்மையில் பெய்த மழையால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாமலும், தேங்கிய மழை நீரால் கொசுத்தொல்லை பெருகியதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதாகவும் இன்று சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிக்கு வந்த கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் இடம் தேவர்மலை ஊராட்சி மன்ற தலைவர் நக்கீரன் முறையிட்டார். இதனால், சம்பவ இடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உடனடியாக அதற்கு மாற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வன் மீது ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.