குடுமியான்மலை பகுதியில் பொது இடத்தில் சூதாட்டம் விளையாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் குடுமியான்மலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லுபட்டறை பகுதியில் சூதாட்டம் விளையாடிய மறிங்கிப்பட்டியை சேர்ந்த அழகுராஜா (23) பத்மநாதன் (23) அடைக்கலம் (55), கீழபாறைக்களம் சின்னையா (46) அரியமுத்துப்பட்டி சின்னையா (21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.