சந்தைப்பேட்டையில் ஆடுகள் விற்பனை மண்டபம்
தொடர் மழையின் காரணமாக தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் டிசம்பர் 22 இன்று காலை கூடிய ஆட்டுச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம் நாமக்கல் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். மழையின் காரணமாக பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க குறைந்த அளவே வந்திருந்தனர் இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 23000 வரை விற்பனையானது தர்மபுரியை சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 5 லட்சத்திற்கு மட்டுமே ஆடுகள் விற்பனையானது. வியாபாரியில் தெரிவித்தனர்.