பொங்கல் பண்டிகை கால நிதி ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு 

போராட்டம்

Update: 2024-12-27 09:21 GMT
கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பண்டிகைக் கால நிதியாக பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம், முறைசாரா தொழிலாளர்கள் சங்கம், ஆட்டோ, தையல், சுமைப்பணி, தரைக்கடை, மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீடு போராட்டம், தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பாக, சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கவன ஈர்ப்பு போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைத் தலைவர் து.கோவிந்தராஜு, முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் த.முருகேசன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளரகள் கே.அன்பு, சா.செங்குட்டுவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.  ஆர்ப்பாட்ட நிறைவில், முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவிற்கு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Similar News