கடம்பூரில் அருகே வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேர் கைது

கடம்பூரில் அருகே வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேர் கைது;

Update: 2025-01-06 03:15 GMT
கடம்பூரில் அருகே வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேர் கைது கடம்பூர் மலைப்பகுதி அத்தியூர் புதூர் பகுதியில் பாறைகளை தகர்க்கும் வெடி பொருட்கள் மறைத்து வைத்திருப்பதாக கடம்பூர் விஏஒ விஜய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அந்தப் பகுதியில் கடம்பூர் போலீசார் சோதனை நடத்தினர், அப்போது அத்தியூர் புதூரில் உள்ள குப்புசாமி எந்த (60), என்பவரது தோட்டத்து மாட்டுக் கொட்டகை அருகே வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு மறைத்து வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் 28, டெட்டர்னேட்டுகள் 28 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது சம்பந்தமாக கடம்பூர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி, சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், (30), வாணிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ராசுகுட்டி (28), கடம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (38), கவுந்தபாடியை சேர்ந்த திருநாவுக்கரசு (38) உள்ளிட்ட 5 பேரை கடம்பூர் போலீசார் செய்து கைது செய்தனர்.

Similar News