தேன்கனிக்கோட்டை: லாரி டிரைவரை கடத்தி தாக்குதல்-5 பேர் மீது வழக்கு பதிவு.
தேன்கனிக்கோட்டை: லாரி டிரைவரை கடத்தி தாக்குதல்-5 பேர் மீது வழக்கு பதிவு.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்துள்ள சீவலப்பேரி அருகேஉள்ள தென்பகம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(44) பார்சல் சர்வீஸ் லாரி டிரைவர் ஆவார். இவர் கடந்த 8-ஆம் தேதி ராயக்கோட்டை- தர்மபுரி சாலையில் லாரியை ஓட்டி சென்றபோது அங்கு போக்குவரத்து பாதிப்பால் சுந்தரம் லாரியை பின்நோக்கி எடுக்க முயன்றார். இதனால் இவரது லாரி பின்னால் இருந்த சொகுசு கார் மீது மோதியது. இதை அடுத்து காரில் இருந்தவர்கள் சுந்தரத்திடம் வாக்குவாதம் செய்து சேதமடைந்ததாக கூறி பழுதை சரி செய்ய ரூ.1 லட்சம் பணம் கேட்டுள்ளனர். லாரி டிரைவர் சுந்தரத்தை அவர்கள் காரில் கடத்தி சென்று ஒரு தங்கும் விடுதியில் வைத்து தாக்கினர். மேலும் அங்கு அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். தப்பி வந்த சுந்தரம் இதுகுறித்து ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.