டிரைவர்களிடம் செல்போன், பணம் பறிப்பு: 5பேர் கைது!
தூத்துக்குடியில் 2 டிரைவர்களிடம் செல்போன், பணம் பறித்த வழக்குகளில் 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் 2 டிரைவர்களிடம் செல்போன், பணம் பறித்த வழக்குகளில் 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் சத்தியபிரகாஷ் (29). லாரி டிரைவர். இவர் முத்தையாபுரம் திருச்செந்தூர் ரோடு டாஸ்மாக் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்த இசக்கிமுத்து (26), சூசைநகரை சேர்ந்த மகேந்திரன் (31), பொன்னாண்டி நகரை சேர்ந்த மாரிமுத்து (22) ஆகியோர் சத்தியபிரகாசிடம் மது குடிக்க பணம் கேட்டு உள்ளனர். ஆனால் சத்தியபிரகாஷ் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், அவரிடம் தகராறு செய்து செல்போன் மற்றும் ரூ.400 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு அந்த 3 பேரையும் கைது செய்தனர். மற்றொரு சம்பவம் : தூத்துக்குடி அருகே உள்ள சிலுக்கன்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (42). டிரைவர். இவர் தட்டப்பாறை விலக்கு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த, முடிவைத்தானேந்தல் யாதவர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துமாலை (25), பார்வதிராஜா (24) ஆகிய 2 பேரும் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.1000 பணத்தை பறித்து சென்று உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.