ஸ்ரீரங்கம் : ஆற்று மணலை பதுக்கிய 5 பேர் கைது
மணல் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை ஸ்ரீரங்கம் போலீசார் பறிமுதல்;

ஸ்ரீரங்கம் போலீசார் திருவளர்சோலை பகுதியில் இருசக்கர வாகனங் களில் மூட்டையுடன் வந்தவர்களை மறித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த மூட்டையில் மணல் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணலை எடுத்து, அவற்றை கடத்தி வந்து அருகில் உள்ள செங்கல் சூளையில் குவித்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செங்கல் சூளைகளுக்கு சென்று பார்த்த போது ஒன்றில் 1 யூனிட் மணலும், மற்றொன்றில் 4 யூனிட் மணலும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக திருவானைக்காவலை சேர்ந்த ராஜா ( 40), விக்ரம் (32), கருணாநிதி (58) மற்றும் தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த ஸ்டாலின் (42), தமிழ்செல்வி (58) ஆகியோரை கைது செய்த போலீசார், மணல் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் ஸ்ரீரங்கம் ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்