குடியிருப்பு பகுதியில் 5அடி நீளமுள்ள பாம்பு மீட்பு
மதுரை திருநகர் குடியிருப்பு பகுதியில் 5அடி நீளமுள்ள பாம்பு பிடிபட்டது;
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தேவி நகர் மணி இம்பாலா தியேட்டர் எதிரே உள்ள பகுதியில் வாய்க்கால் ஒன்று உள்ளது.இது குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியாகும்.அந்த வாய்க்கால் பகுதியில் சுமார் 5 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அதே பகுதியில் பாம்பு பிடி வீரரான சகாதேவனை தொடர்பு கொண்டு மிகப்பெரிய அளவில் பாம்பு ஒன்று என தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பிடி வீரர் சகாதேவன் சுமார் 5 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை லாபகமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தார். மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் 5 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.