இன்று முதல் 5 சோதனை சாவடிகளில் மட்டும் இபாஸ் நடைமுறை

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு;

Update: 2025-04-22 14:00 GMT
நீலகிரிக்கு வரும் வாகனங்கள் இ பாஸ் அனுமதி பெற்று வருகிறதா என்று இன்று முதல் 5 சோதனை சாவடிகளில் மட்டும் சோதித்தால் போதும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ................ நீலகிரி மாவட்டத்தில் கேரளா, கர்நாடகா மாநில எல்லையை ஒட்டி 11 சோதனை சாவடிகளும், மாவட்ட எல்லைகளில் உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கெத்தை உள்ளிட்ட 5 சோதனை சாவடிகள் என மொத்தம் 16 சோதனை சாவடிகளில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்கள் இ பாஸ் பெற்று வருகிறதா என்று இம்மாதம் 1 ம் தேதி முதல் வாகன சோதனை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இ பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுபப்பட்டு வந்தன. இந் நிலையில் சென்னை உயர்நீதி மன்றத்தில் 07.04.2025 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, சென்னை உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி இன்று முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, மேல்கூடலூர்,கெத்தை உள்ளிட்ட ஐந்து சோதனை சாவடிகளில் மட்டும் இ பாஸ் சோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News